ELON MUSK-TWITTER: 12 மணி நேரம் வேலை, இல்லனா பணி நீக்கம் - ட்விட்டர் பணியாளர்களுக்கு மஸ்க் அதிரடி உத்தரவு?

ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது

Continues below advertisement

ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது

உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிலையில்தான் சமீபத்தில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார். அதன் பங்குகளை வாங்கியதையடுத்து அவர் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக உள் நுழைந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது.  சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார்.

Continues below advertisement

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல், பணியாளர்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் ட்விட்டர் பங்குகளை நிறுவனத்தின் பணியாளர்கள் வங்குவதை தவிர்க்கவே என கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்படாதவர்களுக்கு அதிக பணி சுமை கொடுக்கப்பட்டுள்ளது.  மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவைச் சந்திக்க ட்விட்டரில் உள்ள பொறியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று எச்சரிக்கையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காம்ப் ஆஃப்கள் அல்லது கூடுதல் மணி நேரங்களுக்கு பணம் செலுத்துவது பற்றி அவர்களால் பேச முடியாது, அப்படி பேசினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், அதனை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளது.  

புளூ டிக்கான சரிபார்ப்பு செயல்முறைக்காக ட்விட்டர் பொறியாளர்களுக்கு நவம்பர் 7ம் தேதிக்குள் பணம் செலுத்தி சரிபார்ப்பு வசதியை தொடங்க வேண்டும் அல்லது வேலையை இழக்க நேரிடும் என மஸ்க் கெடு விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சில ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என்று சிஎன்பிசி ஆதாரங்கள் கூறுகின்றன.

பொறியாளர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. எலான் மஸ்க் 50 சதவீத ஆட்குறைப்பு என மிரட்டி, ஊழியர்களை உத்தரவுக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் முதல் கட்ட பணிநீக்கங்களில் சுமார் 2000 தொழிலாளர்கள் நீக்கப்படலாம்.  பணிநீக்கம் செய்வதற்கு முன்பே தலைமை அதிகாரிகள் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு விடைபெற்றுள்ளனர். இதனால் ட்விட்டர் முழுமையாக மஸ்க் கட்டுக்குள் வந்தது.   ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு போன்ற சிறந்த பிராண்டுகள் தங்கள் விளம்பரங்களை ட்விட்டர் தளத்திலிருந்து பின்வாங்கியுள்ளனர். ட்விட்டரில் விளம்பரதாரர்களின் நம்பிக்கைக்கு இது மேலும் ஒரு அடியாக இருக்கும்.

சிறந்த விளம்பர நிறுவனமான IPG, கோகோ கோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதன் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டரில் பிரச்சினைகள் தொடர்வதற்கு முன் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. வெஸ்டெட் ஷேர் என்பது நிறுவனத்தில் பங்குகளை வழங்கும் ஊழியர்களுக்கு அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிறுவனர்களுக்கு, பெரும்பாலும் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பங்குகளைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த பங்கு விருப்பங்களை மீட்டெடுப்பதற்கான 100 சதவீத உரிமைகளை அவர்கள் பெறுகிறார்கள். மஸ்க்கின் கீழ், டெஸ்லா ஏற்கனவே பங்கு மானியங்களைப் பெறுவதற்கு முன்பு மக்களை பணிநீக்கம் செய்ததற்காக வழக்குகளை எதிர்கொண்டார், அதனால்தான் ட்விட்டர் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.  

Continues below advertisement