நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் அதிகரிக்கும்.



ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.



மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.



மிளகு ‘கறுப்பு தங்கம்’ என்று அழைக்கபடுகிறது.



மிளகு 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையை சேர்ந்தது.



மிளகில் கருமிளகு மற்றும் வால் மிளகு என முக்கியமான இரு வகைகள் உண்டு.



‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி.



உணவில் உள்ள விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு.



5000 ஆண்டுகளுக்கு முன்பே மிளகு பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது



சமையலில் மிளகு சேர்த்து கொள்வது நல்லது.