ஆரோக்கியமாக இருக்கும் பெரும்பாலானோர் ரத்த தானம் செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



உங்களுக்கு ரத்த சோகை இல்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.



எச்.ஐ.வி. பாதிப்பு, மஞ்சள் காமாலை, கிரந்தி நோய், காசநோய் போன்ற நோய்கள் இருக்கும் நபர்களால் ரத்த தானம் செய்யக் கூடாது.



சளி, தொண்டை வறட்சி, வாய்ப்புண், வயிற்றுப் பிரச்சினை அல்லது வேறு தொற்று இருந்தாலும் ரத்த தான மையங்களில் இருந்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.



தொற்று நோய்கள் ஏதும் இருந்தால், ரத்த தானம் செய்வதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக குணமாகி இருக்க வேண்டும்.



ஆண்டிபயாட்டிக் மருந்து ஏதும் சாப்பிட்டிருந்தால் ரத்த தானம் செய்வதற்கு ஏழு நாள்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.



ரத்த தானம் செய்வதற்கு குறைந்தபட்ச வயது 16.



சராசரி மனிதனுக்கு உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். அவருடைய உடல் எடையைப் பொருத்து இது அமையும்.



சராசரி ரத்த தானத்தின் போது, சுமார் 500 மில்லி எடுக்கப்படும். நல்ல ஆரோக்கியமான பெரியவர்கள் உடலில் 24 - 48 மணி நேரத்தில் இந்தத் திரவம் சுரந்துவிடும்.