இந்திய பாதுகாப்பு துறையின் பணியிடங்களை நிரப்ப அக்னிபத் என்ற திட்டம் அறிமுகம்



இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதிகப்படியான இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கவும் முடிவு



அக்னிபத் திட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள்



குறைந்தது 17 வயது முதல் அதிகப்பட்சமாக 21 வயது வரையுள்ள இளைஞர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள்



4 ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு இதில் 25% பேர் ராணுவ பணிகளில் சேர்க்கப்படுவார்கள்



4 ஆண்டுகால பணிக்கு பின் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் சேவா நிதி பேக்கேஜ் வழங்கப்படும்



இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்புள்ளது.



முதல் ஆண்டில் சம்பளமாக ரூ.30,000( பிடித்தம் போக ரூ.21,000), 2 ஆம் ஆண்டில் ரூ.33,000 (ரூ.23,100) வழங்கப்படும்.



3 ஆம் ஆண்டில் ரூ.36,500 (ரூ.25,580), 4 ஆம் ஆண்டில் ரூ.40,000 ( ரூ.28,000) வழங்கப்படும்.



இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது இராணுவத்தில் சேர நினைக்கும்
தகுதியுடைய இளைஞர்கள் மறக்காமல் விண்ணப்பியுங்கள்