உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் நத்தையை ரசித்து ருசித்து சமைத்து சாப்பிடுகிறார்கள் எலும்பு இல்லாத இந்த நத்தை கறியை சாப்பிடுவதே தனி ருசி என பலரும் கூறுவதுண்டு நத்தை கறி இன்றோ நேற்றோ உருவான உணவு இல்லை காலங்காலமாக பாரம்பரியமாகவே இதை பல நாடுகளை சேர்ந்தவர்களும் சாப்பிடுகிறார்கள் கிராமங்களிலும் பழங்குடியினரும் நத்தை கறியை மழைக் காலங்களில் தவிர்க்காமல் எடுத்து கொள்கிறார்கள் 100 கிராம் நத்தையில் 3.5 மில்லி கிராம் அயர்ன் கிடைக்கிறது இது மாட்டுக் கறியில் கிடைப்பதை விட அதிகம் 100 கிராம் நத்தை சாப்பிட்டால் உங்களது உடலில் 90 கலோரி ஆற்றல் ஏறும் நத்தையில் கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் உள்ளது நத்தையை புதிதாக உண்பவர்களுக்கு செரிமானப் பிரச்னைகள் வரலாம்