எந்த சீசனிலும் டீ இல்லாமல் இருக்க முடியாதவர்கள் ஆரோக்கியமளிக்கும் பெருஞ்சீரக டீ ட்ரை பண்ணலாம் பெருஞ்சீரகத்தில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், சோடியம் அதிகமுள்ளது பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள செலினியம் கல்லீரல் நச்சுகளை நீக்கி பாதுகாக்கிறது பெருஞ்சீரகத்தில் டயட்டரி ஃபைபர்ஸ் இருப்பதால் உடல் எடை குறைப்பில் எளிதாக உதவுகிறது இதில் உள்ள வைட்டமின்- ஏ, என்சைம்கள் கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றது பெருஞ்சீரக டீயில் உள்ள மெலடோனின் தூக்கத்தை தூண்டி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தைக் குறைக்கிறது இதிலுள்ள நைட்ரேட், சோடியம், பொட்டாசியம் இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் ஒரு கப் தண்ணீரில் அரை ஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும் பின் 10 நிமிடங்கள் கழித்து பாதி எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் பெருஞ்சீரக டீ ரெடி