விஜய் டிவியில் கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார் புகழ் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் விஜய் சேதுபதி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம், ஏஜண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சின்னத்திரையிலிருந்த வெள்ளித்திரை வரை அனைத்திலும் படு பிசியாக உள்ளார் தற்போது அவரது காதலி பென்சியாவை மணந்துள்ளார் தனது காதலி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செப். 1ஆம் தேதி விழுப்புரத்தில் திருமணம் செய்து கொண்டார் உறவினர்கள் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் முன்நிலையில் திருமணம் செய்து கொண்டார் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் செப்டம்பர் 5 ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம்