தமிழ் திரை உலகில் துணை நடிகராக பணிபுரிந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் விஜய் சேதுபதி



ஹீரோ, வில்லன் என முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்



வருடத்திற்கு மூன்று நான்கு படங்களை கொடுத்து வருகிறார்



இந்நிலையில் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்



விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் என இந்த ஆண்டு இவர் நடிப்பில் மூன்று படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது



தற்போது இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 'மேரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்



இந்த படத்தில் இவருக்கு கதாநாயகியாக முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்



மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது



படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் தற்போது இந்த திரைப்படம் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது



இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது