விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘லைகர்’

குத்துச் சண்டையை மையமாகக் கொண்டு லைகர் படம் எடுக்கப்பட்டுள்ளது

இதில் அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்

புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் இப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறார்

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது

இதில் லைகர் படத்தின் படக்குழுவில் உள்ள பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் போது விஜய் தேவரகொண்டா, தனக்கு லோக்கேஷ் கனகராஜூடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளதாக தெரிவித்தார்

மேலும், லோகேஷ் யூனிவெர்ஸுடன் நான் இணையும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்றும் அவர் கூறினார்

வெற்றிமாறன், பா ரஞ்சித் ஆகியோரின் படைப்புகளை மிகவும் விரும்பி ரசிப்பேன் என்றும் குறிப்பிட்டார்

நல்ல கதை அமைந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்