1975 ஆம் ஆண்டு கன்னிகாபுரத்தில் பிறந்தார் நா. முத்துக்குமார் இவர் 4 வயதாக இருந்தபோது அவரது தாயார் காலமானார் இவர் எழுதிய அணிலாடும் முன்றில் புத்தகத்தில் இவரது தந்தையை முக்கிய கதாபாத்திரமாக முன் வைத்தார் இயக்குநர் பாலு மகேந்திரா, கவிஞர் அறிவுமதியை இவரது வழிகாட்டியாக கருதினார் இவரது தந்தை தமிழ் ஆசிரியர் என்பதால் இவர் புத்தகங்களுக்கும் இலக்கியத்திற்க்கும் மத்தியில் வளர்ந்தார் தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நா. முத்துக்குமார் வீர நடை படத்திற்காக முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார் வாரணம் ஆயிரம் படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார் சிறந்த தமிழ் பாடலாசிரியருக்கான அதிக பிலிம்ஃபேர் விருது பெற்ற ஒரே பாடலாசிரியர் இவர்தான்