'அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படம் விடுதலை



சூரி, விஜய் சேதுபதி, இயக்குநர் கெளதம் மேனன் என பலர் நடித்து வருகின்றனர்



இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்



வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் முதல் படம்



சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது



4-வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள சிறுமலையில் நடைபெற்றது



படத்திற்காக சூரி செய்யும் கடுமையான வொர்க் அவுட் வீடியோக்கள் வைரலானது



இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடித்து வருகிறார்



பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது



இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் திரையரங்கில் வெளியிடும் உரிமம் பெற்றுள்ளது