மிக சில பாடகர்களே தனக்கான பட்டாளத்தை வைத்திருப்பார்கள் அந்த வரிசையில், ஸ்ரேயா கோஷல் ரொம்ப ஸ்பெஷல். இது ’ஸ்ரேயாவின் பாடல்’ என சொல்லும் அளவிற்கு பல ஹிட் பாடல்களை அள்ளி குவித்திருக்கிறார் பாடல்களை கேட்க, கொண்டாட மொழி தடையில்லை என்பதை நிரூபித்தவர் ஸ்ரேயா. காதல் பாடல்களுக்கு தன் குரலை வாடகைக்கு விட்டிருப்பவர் ஸ்ரேயா. ஆல்பம் படத்தில் பாடிய ‘செல்லமே செல்லம்..’ இன்7ஜியில் ‘ நினைத்து நினைத்து பார்த்தால்..’ விருமாண்டியில் ‘உன்ன விட..’ இன்னும் பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் ஸ்ரேயா எந்த மொழியானாலும், சொல் உச்சரிப்புக்கு கலங்கம் இல்லாது சரியாக பாடுவது ஸ்ரேயாவின் தனிச்சிறப்பு புகழை தாண்டிய அன்பும் பாசமும் கொண்ட ரசிகர்கள் இங்கு நிரந்தரம் வாழ்த்துகள் ஸ்ரேயா!