லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்துள்ள படம், வெந்து தணிந்தது காடு

இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்

நீண்ட நாட்களாக வெளியாகமல் இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்

படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர்

படத்தின் 2வது லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

தற்போது, ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற மெல்லிசை பாடல் யூ டியூப்பில் வெளியாகியுள்ளது

இந்த பாடலுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர்

மறக்குமா நெஞ்சம் என தொடங்கும் இப்பாடலில், இசையால் ஏ ஆர் ரகுமான் மனதை வருடியுள்ளார்

இந்த படம் கவுதம் மேனன் – சிம்பு இணைந்து பணி புரியும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது