முடி வளர்ச்சிக்கு இந்த கேரள பாரம்பரிய எண்ணெய்யை பயன்படுத்துங்கள்..!



தேவையான பொருட்கள் : கற்றாழை, செம்பருத்தி, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், தேங்காய் எண்ணெய்



முதலில் வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வையுங்கள்



பிறகு கறிவேப்பிலையை கழுவி எடுத்து கொள்ளுங்கள்



பிறகு கற்றாழையை வெட்டி ஜெல்லை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்



பிறகு வெங்காயம், வெந்தயம், கற்றாழை, கறிவேப்பிலை, செம்பருத்தியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள்



அந்த சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுள் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள்



அதன் பிறகு சிறிது மிளகு சேர்த்து மீண்டும் 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள்



இந்த எண்ணெயை ஒரு ஃபில்டர் செய்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்



இந்த என்ணெயை சிறிது சூடுப்படுத்தி தலையில் 3-5 நிமிடங்கள் மசாஜ் செய்து முடி நன்றாக வளரும் என்று நம்பப்படுகிறது