டாஸ் வென்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தனர் ஹர்லீன் தியோல் 46 ரன்களும், மேகனா, கார்டனர் மற்றும் ஹேமலதாவும் தலா 20 ரன்கள் மேல் குவித்தனர் உபி வாரியர்ஸ் அணி தரப்பில் தீப்தி சர்மா மற்றும் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்கள் எடுத்தனர் அடுத்து களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்தனர் கிரண் நவ்கிரே - தீப்தி சர்மா பார்ட்னர்ஷிப் 66 ரன்களை குவித்தது உபி வாரியர்ஸ் அணி அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்தனர் உபி அணிக்கு கடைசி 4 ஓவேரில் 65 ரன்கள் தேவைப்பட்டது 19.5 ஓவர் முடிவில் உ.பி அணி 175/7 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணியின் கிம் கார்த் மட்டுமே 5 விக்கெட்கள் எடுத்தார் ஆட்டநாயகி விருதை கிரேஸ் ஹாரிஸ் தட்டி சென்றார்