5 ஜோதி லிங்க கோயில்களுக்கு பட்ஜெட்டில் செல்ல வாய்ப்பு! 5 ஜோதி லிங்க கோயில்களை தரிசிப்பதற்கான திட்டத்தை, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது 10 இரவுகள் மற்றும் 11 நாட்கள் கொண்ட நீண்ட பயணமாகும் இந்தப் பயணம் 24 ஆகஸ்ட் 2024 அன்று தொடங்கி , 3 செப்டம்பர் 2024 அன்று முடிகிறது பாரத் கௌரவ் ஷிர்டி & ஜோதிர்லிங்க யாத்ரா எக்ஸ் பெட்டியா என்பது பேக்கேஜின் பெயர் உஜ்ஜைன்,சோம்நாத்,துவாரகா,ஷிர்டி,நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் மூலம் பயணத்தை மேற்கொள்ளலாம் காலை தேநீர் முதல் இரவு உணவு வரை ரயிலில் வழங்கப்படுமாம் எகானமி வகுப்பில் பயணம் செய்தால் 20 ஆயிரத்து 899 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் ஸ்டாண்டர்டு கேடகரி பேக்கேஜை எடுத்தால், தனி நபருக்கு 35 ஆயிரத்து 795 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் கோயில் தரிசனத்திற்கு செல்வலர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்