சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் சூப்பர் ஸ்பாட் வரவுள்ளது மிதக்கும் ஹோட்டலான இதை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கி வருகிறது மிதவை படகு உணவகத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி முதல் தளம் திறந்தவெளி தளமாக இருக்க, மேல் தளம் உணவு உண்ணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது இந்த படகில் கண்ணுக்கு இனிமையான மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன இன்னும் சில வாரங்களில் இந்த ஸ்பாட் திறக்கப்படவுள்ளது இந்த உணவகம் மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பட உள்ளது இங்கு நண்பர்களுடன் குழுவாக உணவு அருந்தலாம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், லைவ் பேண்ட் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த உணவகத்தை பயன்படுத்தலாம்