தனியாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா? அருகில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு தனியா செல்லுங்கள்!



பயணத்திற்காக உங்கள் வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க பழக்கப்படுத்துங்கள்!



பயணத்தின்போது தேவையானவற்றை பேக்கிங் செய்ய தவறாதீர்கள். தேவையானவற்றை லிஸ்ட் எழுதி அதை சரி பார்க்கவும்.



உங்கள் பயண திட்டத்தின் விவரங்களை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது நெருங்கிய வட்டாரத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



உங்கள் எலக்ரானிக் கேட்ஜட்களுக்கு பேட்டரி பேக் அப் வைத்து கொள்ளுங்கள்.



பயணத்தின்போது, கையில் பணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கார்டு, டிஜிட்டல் கரன்சி பயன்படுத்த எல்லா இடங்களிலும் வசதி இருக்காது.



மருத்துவ பொருட்கள் அடங்கிய ‘கிட்’ வைத்திருப்பதும் அவசியமானது. சோப், டிஷ்யூபேப்பர், எண்ணெய், ஷாம்பு, நாப்கின், பற்பசை, பிரஷ், போன்றவைகள் அவசியம்.



இரு சக்கர வாகனமா? காரா? பொது போக்குவரத்தா? என்பதை தீர்மானித்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிட வேண்டும்.


சொந்த வாகனம் எதிர்பாராமல் ஏற்படும் பஞ்சர், டயரில் காற்றழுத்தம் குறைவது போன்றவற்றை நீங்களே சரி செய்துவிடுவதற்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.



முன்கூட்டியே திட்டமிட்டு காலதாமதம் செய்யாமல் செயல்படுவது மன நிறைவாக பயணத்தை முடிப்பதற்கு வழிவகை செய்யும். ஹேப்பி ஜர்னி!