தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவருக்கு வயது 37 நயன்தாராவின் ட்ரெயினர் நேரத்திற்கு தகுந்தவகையில் விதவிதமான டயட்டை வகுத்து கொடுக்கிறார். இது நயன்தராவை போரடிக்காமல் வைத்துக்கொள்கிறதாம். நயன்தாராவின் டயட்டில் பதப்படுத்தப்பட்ட இனிப்புக்கு இடம் கிடையாது. முட்டை, பழங்கள், காய்கறிகள், அதிக கொழுப்பில்லாத இறைச்சி உள்ளிட்டவற்றை உணவாக எடுத்துக்கொள்கிறார். உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ளும் நயன், பழச்சாறுகள், இளநீர், சூப் வகைகள் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொள்கிறார். வெயிட் ட்ரெய்னிங் செய்யும் நயன், யோகாவையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார். 8 மணி நேர தூக்கத்தில் நயன் மிகவும் கரார். டயட்டில் பெரிதாக மெனக்கிடாத நயன் ‘ குறைவாக சாப்பிட்டு அதிக உழை’ என்ற மந்திரத்தை பின்பற்றுகிறார்.