அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா



இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்துள்ள ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது



கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்பட்டது



கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது



வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக பிரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது



தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது


சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற பிரொமோஷன் நிகழ்ச்சியில்
ரன்பீர் கபூர், நாகார்ஜூன், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்



ரஜினியின் ஸ்டைல் பிடிக்கும், அப்பு கமலை ரொம்ப பிடிக்கும் என்று பேசினார் ரன்பீர்



அமிதாப் பச்சன் மற்றும் நாகார்ஜுனாவுடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது எனறும் கூறினார்