சூரியனுக்கு நன்றி கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நண்பர்கள், குடும்பத்தினருடன் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட பிறகு தான் பொங்கல் கொண்டாட்டம் துவங்குகிறது.
இந்த ஆண்டு வாழ்த்துடன் மேற்கோள்களையும் இணைத்து கூறி உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்வியுங்கள்.
1. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். நாம் வேறுபாடுகளை மதித்து கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும் - ஜவஹர்லால் நேரு.
2. மொழி இனம் மறந்து, ஜாதி மதம் துறந்து ஒற்றுமையாய் கொண்டாடுவது மட்டுமே கொண்டாட்டம்.
3. சூரியனின் அரவணைப்பு உங்களை முடிவில்லாத மகிழ்ச்சியுடன் ஆசிர்வதிக்கட்டும்.
4. தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்து இனிக்கட்டும்.
5. தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை, திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனிதனின் மனது.
6. முகத்தில் சிரிப்பு பொங்க, வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, பொங்கட்டும் தை பொங்கல்.
7. இந்த பொங்கலில் வறட்சி நீங்கி வாழ்வு பொங்கட்டும், இருள் மறைந்து ஒளி பெருகட்டும்.