தமிழ்நாட்டில் மழை குறித்து தெரிந்து கொள்வோம் குளிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்கிறது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக... தமிழ்நாட்டில் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம் 25.01.2023 மற்றும் 26.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27.01.2023- தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜன.28: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மழை அளவு- காக்காச்சி (திருநெல்வேலி) 5 செ.மீ திருப்பூண்டி (நாகப்பட்டினம்)- 3 செ.மீ வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொண்டு, திட்டத்தை வகுத்து கொள்ளுங்கள்