பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் பிரபலம் யார்? இந்த வாரத்தின் திங்கட்கிழமையன்று பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது அனைத்து போட்டியாளர்களும், இரண்டு நபர்களை நாமினேட் செய்யவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது முகத்தில் க்ரீமை பூசி நாமினேஷனுக்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டது அதற்கு ஏற்றவாரு அனைவரும் விதிகளை பின்பற்றி நாமினேட் செய்தனர் இந்த வாரத்தில், ரச்சிதா, குயின்ஸி, ஜனனி, மைனா, தனலஷ்மி மற்றும் கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் அப்போதே அனைத்து பிக்பாஸ் ரசிகர்களும், குயின்ஸிதான் எலிமினேட் ஆவார் என்று கணித்தனர் கடந்த வாரமே, குயின்ஸிதான் எலிமினேட் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர் குயின்ஸி மேல் தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வந்தது இந்நிலையில் குயின்ஸி எலிமினேட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது