கோலிவுட்டின் பவர் கப்புள் சூர்யா - ஜோதிகா இவர்களைப் போல இவர்களது காதல் கதையும் மிகவும் பிரபலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி இவர்கள் முதன் முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஒன்றாக நடித்தனர் இதுவரை 7 படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் நேற்று 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது இதில் சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை வென்றது சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார் சிறந்த தயாரிப்புக்கான விருது ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டது சிறந்த இயக்குநருக்கான விருது சுதா கொங்கராவிற்கு வழங்கப்பட்டது இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன