சுரேஷ் ரெய்னா ஐபிஎல் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்



கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்



ஓய்வு தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்



‘நாட்டிற்காகவும், உத்தரபிரதேசத்திற்காகவும் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையான ஒன்று’, என்று கூறியுள்ளார்



தோனியின் தலைமையில் 2011 உலகக் கோப்பையை வென்ற அணியில் ரெய்னா விளையாடினார்


13 ஆண்டுகால சர்வதேச கிரிகெட் வாழ்க்கையில், ரெய்னா 18 டெஸ்ட்,
226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார்



இந்தியாவுக்காக 226 ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1605 ரன்களும் குவித்துள்ளார்



அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் இவர்



ஐபிஎல்-இல் சுரேஷ் ரெய்னா 5528 ரன்கள் குவித்துள்ளார்



ரெய்னா வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது