தென்னிந்தியாவில் உள்ள பழமையான விஷ்ணு கோயில்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்க ரங்கநாத சுவாமி கோயில் 156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்தியாவில் புகழ்பெற்ற வைணவ கோயிலாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும். பணக்கார கோயிலாகவும் இந்த கோயில் உள்ளது.
கர்நாடகாவின் மேலுகோடாவில் அமைந்துள்ளது இந்த செலுவநாராயணா கோயில். 1000 ஆண்டுகள் பழமையான சவாலான கட்டிடக்கலை கொண்ட கோயில் இதுவாகும்.
அனந்தன் மீது பள்ளி கொண்டிருக்கும் கோலத்தில் பெருமாள் இங்கு காட்சி தருகிறார். பத்மநாபசுவாமி கோயில் பல மர்மங்களை தன்னடக்கி உள்ளது.
48 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.மிகவும் பழமையான கோயில் இந்த கோயில் ஆகும்.
திருநெல்வேலியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த திருக்கறுங்குடி நம்பி கோயில். பழமையான கட்டிட கலைக்கு இந்த கோயில் சிறந்த சான்றாகும்.
இந்த கோயிலின் கருவறை பிரம்மாண்டமான தேர் வடிவத்தில் அமைந்துள்ளது. விஷ்ணு புராணத்தை கூறும் சுவரோவியங்களும் இங்கு உள்ளது.
12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான கட்டிடக் கலைக்கு சான்றாகும்.
கர்நாடகாவின் திப்பனஹள்ளியில் அமைந்துள்ளது இந்த ரங்கஸ்தாலா கோயில். 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்டது.