ராமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயில் மிகவும் புகழ்பெற்ற சிவன் கோயில் ஆகும். இந்த கோயிலில் வழிபடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் குவிவது வழக்கம்.
ஆந்திராவில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் கோயில். ராகு - கேது தோஷங்கள் பரிகாரங்களுக்காக இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
தென்னிந்தியாவிலே கேரளாவின் கட்டிடக்கலை மிகவும் வித்தியாசமான கட்டிடக்கலை ஆகும். அதற்கு ஒரு அடையாளம்தான் இந்த வடக்குநாதன் சிவன் கோயில்.மிகப்பழமையான கோயில் இதுவாகும்.
கர்நாடகாவில் அமைந்துள்ளது முருதேஸ்வரர் கோயில். கம்பீரமாக 123 அடி உயரத்திற்கு சிவபெருமான் தியான கோலத்தில் காட்சி தருகிறார்.
சோழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக இருப்பது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில். இன்றளவும் இதன் கட்டிடக்கலை விளக்க முடியாத அதிசயமாக உள்ளது.
தெலங்கானாவில் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த உமா மகேஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில் ஆகும். இங்குள்ள சிவன், பார்வதியை வணங்க கோடிக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் குவிவது வழக்கம்.
பல்லவ கட்டிடக் கலைக்கு மிகப்பெரிய சான்று இந்த மாமல்லபுரம் கடற்கரை கோயில். சுற்றுலா வரும் பயணிகள் இங்குள்ள சிவனை வணங்குவார்கள்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இந்த மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது. வித்தியாசமான கட்டிடக்கலையை இந்த மல்லிகார்ஜுனா கோயில் கொண்டுள்ளது.
16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது இந்த ஸ்ரீ வீரபத்திர கோயில். மிகவும் சவாலான கட்டிடக்கலை கொண்ட இந்த கோயிலில் தொங்கும் தூணும் உள்ளது.