சூப் நல்லதா? கெட்டதா? தெரிஞ்சிக்கலாம் வாங்க. ''நம் பாரம்பரிய சமையலில் ஒன்று ரசம். இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப். மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததுதான் சூப் கலாசாரம் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் சூப்கள், உடலுக்கு நல்லது. சூப், நம் உடம்பில் உள்ள என்சைம்களைத் தூண்டுவதால், செரிமானம் சரிவர நடக்கும். அசிடிட்டியைக் குறைக்கும், பசியைத் தூண்டும். பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் சூப்களில் சுவையூட்டிகள் மற்றும் மோனோசோடியம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வீட்டில் தயாரிக்கப்படும் சூப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். வெளியில் சூப் சாப்பிட ஆசைப்படுபவர் களை, வீட்டில் சூப் பருக வைக்கும் பழக்கத்துக்கு கொண்டு வருவது நல்லது!'