மீனில் ஏராளமான ஆரோக்கியம் நிறைந்துள்ளது. தினமும் மீன் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் இதோ. மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. வங்காளம், அசாம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் டய்ட்டில் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும். நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது. சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. ஒமிகா 3 கொழுப்பு சத்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதயத்திற்கு நல்லது. வைட்டமின் டி நிறைந்தது. தினமும் மீன் சாப்பிடுவது நல்லது.