அதிகமாக மொபைல் போன் பார்த்து அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா..



உங்களுக்கு ஏற்படும் தலை வலியை குறைக்க சில டிப்ஸ்கள் என்னென்ன?



மொபைல் போனின் ஸ்கிரீன் லைட்டை குறைத்து வைத்திருக்க வேண்டும்.



ஏனென்றால் ஸ்கிரீன் லைட் நம்முடைய கண்ணிற்கு அதிக சிரமத்தை ஏற்படும். இதன்காரணமாக வலி ஏற்படலாம்.



மொபைல் போனிலுள்ள ப்ளூ லைட்டை ஃபில்டரை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்.



மொபைல் போனிலுள்ள ப்ளூ லைட் ஃபில்டர் விருப்பம் நம்முடைய மொபைல் போனிலிருந்து வரும் ப்ளூ லைட்டை குறைக்கும்.



மொபைல் போனில் வரும் எழுத்துகளின் அளவை அதிகமாக வைத்திருக்க வேண்டும்.



சிறிய எழுத்துகளை வைத்திருந்தால் அதை படிக்கும் போது நம்முடைய கண்ணிற்கு அதிகமாக சிரமம் ஏற்படும்.



அதிகமாக மொபைல் போன் பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.



இப்படி சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் மொபைல் போன்கள் மூலம் வரும் தலைவலி சற்று குறைய வாய்ப்பு உண்டு.