அயோடின் உப்பு, கல் உப்பு, இந்து உப்பு என மார்க்கெட்டில் நிறைய வகை வகையான உப்பு மார்க்கெட்டில் வந்துவிட்டன.



இப்போது மக்களுக்கு குழப்பம் இதில் எந்த உப்பை சாப்பிட வேண்டும் என்பதுதான்.



ஐயோடின் ஏதோ வேண்டாத மினரல் என நிறைய பேர் கருதுகின்றனர்.



உண்மையில் சோடியம் தான் நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மினரல்.



சோடியம் எல்லாவிதமான உப்புக்களிலும் இருக்கிறது.



ஆனால் ஐயோடின் ஐயோடைஸ்டு உப்பில் மட்டும் தான் இருக்கிறது.



அது தைராய்டு அளவைக் காக்க அவசியமானது.



அயோடின் ஒரு நுண்ணிய உணவு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் 'தைராக்ஸின்' ஹார்மோன் உதவுகிறது.



வேறு சில உணவுகளின் மூலம் அயோடினைப் பெறலாம் என்று கூறி உங்களை சிலர்திசை திருப்பலாம். ஆனால் அது உண்மையென நம்பாதீர்கள்.



அயோடைஸ்டு உப்பை உட்கொள்வது சிறந்தது எனப் பரிந்துரைக்கிறேன்.