ஆறு வயதில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் ஷிவம் துபே துபேவின் தந்தை, அவரை மும்பையின் மேற்கு அந்தேரியில் உள்ள சந்திரகாந்த் பண்டிட் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தார் அதன் பிறகு சதீஷ் சமந்திடம் கிரிக்கெட் பயிற்சி பெற்றார் 14 வயதில், பணப் பிரச்சினை காரணமாக ஷிவம் கிரிக்கெட்டிலிருந்து விலகினார் 4 ஆண்டுகளுக்குப் பின், அவர் தனது மாமா ரமேஷ் துபே, உறவினர் ராஜீவ் துபே ஆகியோரின் ஆதரவுடன் கிரிக்கெட் விளையாட தொடங்கினார் அவர் 2015-16இல் பரோடாவுக்கு எதிராக மும்பைக்காக டி20யில் அறிமுகமானார் 2018-19 விஜய் ஹசாரே கோப்பையை வென்ற மும்பை அணியில் சிவம் துபேயும் இடம் பெற்றிருந்தார் 2018 ஆம் ஆண்டில், ஆர்சிபி அவரை ஐபிஎல் ஏலத்தில் 5 கோடிக்கு வாங்கியது 2019ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஷிவம் துபே ஒருநாள் போட்டியில் விளையாடினார் 2023 ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணியில் ஷிவம் துபேயும் இடம் பெற்றிருந்தார்