வண்ண விழிகளின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம் நமது கண் விழிகள் பல விதமான நிறங்களில் இருப்பதை அனைவரும் அறிந்ததே கறுப்பு, பழுப்பு மட்டுமல்ல நீலம், பச்சை என பல விதமான நிறங்களிலும் விழிகள் உண்டு லட்சக்கணக்கான நிறங்களைப் பிரித்து உணரும் திறன் மனிதக் கண்ணுக்கு உண்டு மனிதருக்கு மனிதர் மாறுபடுவது மட்டுமல்ல, ஒரே நபரின் இரு விழிகளின் நிறமும் வேறுபடும் மனிதரின் தோல் நிறுத்துக்கு காரணமாவது மெலனின் என்ற நிறமி அதேபோல, கருவிழிகளில் உள்ள மெலனோசைட்டுகள், கண்ணின் நிறத்தை தீர்மானிக்கின்றன ஆய்வின்படி, உலகில் கறுப்பு, பழுப்பு நிற கண்விழிகளே அதிகம் 6000 ஆண்டுகளுக்கு பின் மரபணு மாற்றத்தின் விளைவாகவே நீல நிறம் கண்ணுடைய நபர்கள் பிறந்துள்ளனர் உலகளவில் பச்சை நிற கண்விழியானது குறைந்தது ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே இருக்கும்