வயிற்று கொழுப்பைக் குறைக்க நாம் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறோம்.



ஆனால் உணவும் முக்கியம்.



வெறும் உணவுப் பழக்கங்கள் வழியாக அதனை சரிசெய்யலாம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?



ஜர்னல் ஆஃப் ஓலியோ சயின்ஸில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு,



ஆப்பிள் சாறு சில வாரங்களில் தொப்பையை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கும் என்று கூறுகிறது.



ஒவ்வொரு நாளும், ஒரு குழுவிற்கு சுமார் 340 கிராம் பாலிபினால் நிறைந்த ஆப்பிள் பானங்கள் வழங்கப்பட்டன,



மற்ற குழு பாலிபினால்கள் இல்லாத பானங்களை உட்கொண்டது.



12 வாரங்களுக்குப் பிறகு, ஆப்பிள் உட்கொண்ட குழுவில் உள்ளவர்களின் உள்ளுறுப்பு கொழுப்புப் பகுதி (VFA) கணிசமாகக் குறைந்துள்ளது கவனிக்கப்பட்டது.



ஆப்பிள் சாறு உடல் எடையை குறைப்பாக தொப்பையை குறைக்க உதவும் எனக் கண்டறியப் பட்டுள்ளது.



தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரே தேவை இல்லை என்கிற பழமொழி உண்மைதான் போல!