ஒட்டுமொத்த இந்தியர்களால் கொண்டாடப்படும் நடிகர்களுள் ஒருவர் ரஜினிகாந்த் உலகம் முழுக்க ரஜினிகாந்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியவர்தான் ரஜினிகாந்த் ரஜினியின் வளர்ச்சியிலும், வாழ்க்கையிலும் பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு உண்டு பாலச்சந்தர் கூறிய அறிவுரையால்தான் குடிப்பழக்கத்தை விட்டதாக ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் 'தண்ணி அடிச்சேன்னு கேள்விப்பட்டா செருப்பாலையே அடிப்பேன்' என பாலசந்தர் கூறினாராம் ‘இதனால, குளிர் பிரதேசங்கள்ல ஷூட் நடந்தா கூட குடிச்சதே இல்லை’ என பகிர்ந்திருக்கிறார் ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்திற்காக ரஜினியின் ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர் ஜெயிலர் திரைப்படம் 2023 கோடை ஸ்பெஷலாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கடுத்து லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது