இன்று வெளியாகியுள்ள ப்ரின்ஸ் திரைப்படத்தின் ரிவ்யூ-உங்கள் பார்வைக்கு ஜாதி, மதங்களை பின்பற்றும் ஊரில் பள்ளி ஆசிரியராக வேலைபார்க்கிறார், அன்பு (சிவகார்த்திகேயன்) பள்ளிக்கு புதிதாக வேலைக்கு வரும் ஜெஸ்ஸிக்கா (மரியா) மீது காதல் கொள்கிறார் இவர்களின் காதலை கிராமமே எதிர்த்து நிற்க, அப்பா சத்யராஜ் மட்டும் ஆதரவு தெரிவிக்கிறார் பின்னர் அப்பெண் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என தெரிந்ததும் அக்காதலை எதிர்க்கிறார் சத்யராஜ் ‘கிராம மக்களையும் அப்பாவையும் தாண்டி காதலிக்கும் பெண்ணை கரம் பிடித்தாரா அன்பு?’ என்ற கேள்விக்கு விடையளிக்கிறது க்ளைமேக்ஸ் படத்தில் காமெடியே பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது முந்தைய படங்களில் சிவகார்த்திகேயனுக்கு கைகொடுத்த காமெடி சென்ஸ் இதில் சறுக்கி விட்டுள்ளது பாடல்களும், டான்சும் மாஸ், மற்றவை எதுவும் பேசப்படும் வகையில் இல்லை மொத்தத்தில் படம் க்ரிஞ் காமெடியின் கலைஞ்சியமாக உள்ளதாக பேசப்படுகிறது