ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ப்ரின்ஸ் இதில் சிவகார்த்திகேயன் வழக்கம் போல காமெடியில் கலக்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார் அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது அதில் ஒன்று பிம்பிலிகா பிலாப்பி, மற்றொன்று ஜெஸிக்கா பாடல் ஆகும் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது படம் தீபாவளியன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் கோலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது