‛இவளோ பெருசா எதிர்பார்க்கல...’ லவ் டுடே ஹீரோ இயக்குநர் பிரதீப் ஜாலி பேட்டி!



ஜெயம் ரவி நடிப்பில் 2019 -ல் வெளியான கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப்



அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள திரைப்படம் லவ் டுடே



படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் படத்தின் வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பிரதீப்



லவ் டுடே திரைப்படத்தை இயக்கி அப்படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ளார் இயக்குநர் பிரதீப்



படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே படத்தின் வசூல் களைகட்ட தொடங்கியது



படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன



இவ்வளவு பெருசா வெற்றி பெறும்னு நான் எதிர்பார்க்கல என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்



ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன் என்று கூறினார்



ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்