தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன் ஆரம்ப காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்க தொடங்கினார் வாட்ஸ் அப் காதல், காலேஜ் டைரீஸ், அப்பா லாக் ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார் தற்போது வரை, வாட்ஸ் அப் காதல் குறும்படம் 3.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது பின்னர் பிரதீப் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் கோமாளி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது கோமாளி படத்தின் வெற்றிக்குப் பிறகு லவ் டுடே படத்தை இயக்கினார் லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் நடிகராக அறிமுகமானார் லவ் டுடே வசூலை வாரி குவித்து, தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டது நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துகள் குவிந்தது