2017 ஆம் ஆண்டில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயிஷா இவர் நடிகை மற்றும் நடன கலைஞர் ஆவார் கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யா- சாயிஷா இடையே காதல் மலர்ந்தது அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு ஆரியானா என பெயர் சூட்டினார்கள் அந்த குழந்தைக்கு நேற்று 2 வயது நிறைவடைந்தது மகளின் பிறந்தநாளை ஆர்யா-சாயிஷா இணைந்து கொண்டாடியுள்ளனர் சினிமா ரசிகர்கள் ஆரியானாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர் மகளின் பிறந்தநாளை அடுத்து சாயிஷா சிறப்பு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்