கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கும் ஜோடியாக நடித்தார் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில், சீதக்காதி, 83 உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் இவர் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் படப்பிடிப்பிற்காக இவர் வெளியூர் சென்றிருந்த போது, திருட்டு சம்பவம் நடந்துள்ளது எனக்கு என்னுடைய வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் மீது சந்தேகம் இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார் இந்த நிலையில் நேற்று முன் தினம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பார்வதி மற்றொரு புகாரை அளித்தார் அந்தப்புகாரில், சுபாஷ் யூடியூப் சேனல்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்று பார்வதி கூறினார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார் சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்