கணையம் செய்யும் வேலைகளை பற்றி நாம் பெரிதாக எடுத்து கொள்வதேயில்லை



கணையம், மெட்டபாலிசத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது



கணையத்தில் கல் வரலாம், வீக்கம் வரலாம், அழற்சி வரலாம், தொற்று வரலாம்



வீக்கம் அடைந்துவிட்டால், அதிகவலி, காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படும்



பித்த நீர் வரும் பாதை அடைப்பட்டு, மஞ்சள் காமாலை வரலாம்



கணையத்தை ஆரோக்கியமாக வைக்க பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும்



பசலைக்கீரை கணையத்திற்கு பலத்தை தரலாம்



வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றும் என சொல்லப்படுகிறது



காளான்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்



கோதுமையைவிட, 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காளானில் உள்ளதாம்