ஆண், பெண் இருவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான தருணம் ஆகும் வாழ்வின் புதிய தொடக்கமான திருமணத்தை சுபமுகூர்த்த தினத்திலே நடத்துகின்றனர் அப்பேற்பட்ட திருமணத்தின்போது நாம் கட்டாயம் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை கீழே காணலாம் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வரும் மாதத்தில் திருமணத்தை நடத்தக்கூடாது ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது ஆகும் திருமணத்தை தை, பங்குனி, வைகாசி, ஆவணி, ஆனி மாதங்களில் நடத்துவது சிறப்பு திருமணத்தை பெரும்பாலும் புதன். வியாழன். வெள்ளி போன்ற நாட்களில் நடத்தினால் கூடுதல் சிறப்பு பஞ்சாங்கப்படி, துதிவிதியை, திரிதியை, பஞ்சி, தசமி, சப்தமி, திரியோதசி ஆகிய நாட்களில் திருமணத்தை தவிர்த்துவிட வேண்டும் அக்னி நட்சத்திரம், கசரயோகம், மிருத்யூ பஞ்சக காலத்தில் மணமக்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடாது இவை எல்லாம் காலகாலமாக நம்பப்பட்டு வருகிறது