திருமணம் என்பது இந்திய மக்களிடையே பெரிதும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது திருமணம் செய்து கொள்வதை ஒரு பெரிய இலக்காக பலரும் கருதுகின்றனர் நீண்ட நாட்களாக திருமணம் செய்ய ஆசைப்பட்டும் பலருக்கு பல காரணங்களால் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் அவ்வாறு திருமண தடை உள்ளவர்கள் சில கோவில்களுக்கு சென்று வரவே அந்த தடை நீங்கும் என்பது நம்பிக்கை தமிழகத்தில் திருமண தடை நீக்குவதாக நம்பப்படும் கோவில்கள் இதோ.. கும்பகோணத்தில் உள்ள திருமண தடை நீக்கும் கடவுளாக இருக்கும் கடவுள் கல்யாண சுந்தரேஸ்வரர் சென்னையில் இருந்து மகாபலிபுரத்துக்ச் செல்லும் வழியில் அமைந்துள்ள நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி திருக்கோவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள லால்குடி எடையத்துமங்கலம் கிராமத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோயில் திருப்பதி மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசஸ்வாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவிண்ணைநகர் கோவில்