பழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு, பழனி 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது இவ்விழாவிற்கான திருப்பணிகள் கடந்த 18ஆம் தேதியே தொடங்கிவிட்டது இவ்விழாவில் கலந்து கொள்ள 6 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது அமைச்சர் சேகர் பாபு இதில் கலந்து கொண்டார் கும்பாபிஷேகம் நடக்கையில், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர் பழனியில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் காவல்துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இவ்விழாவிற்காக பல சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன