வீகன் டயட் எனப்படும் உணவு முறை சமீப காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது



இந்த உணவு முறையில் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் உணவுகளை மட்டும் உண்ணுகிறார்கள்



விலங்கில் இருந்து வரும் பால் பொருட்கள் முதலியவற்றை கூட எடுக்கக்கூடாது



இந்த உணவு முறையை பின்பற்றுபவர்களின் உடம்பில் திடீர் உடல் எடையில் மாற்றம் வரலாம்



இந்த உணவு முறையில் தாவரத்தில் இருந்து அதிகப்படியான புரதம் எடுத்தால் குடல் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படலாம்



அதிக அளவில் சோயா பொருட்களில் உள்ள புரதத்தை எடுப்பதால் தோல் மற்றும் முடிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்



வீகன் டயட் முறை பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படலாம்



வீகன் டயட் முறை பின்பற்றுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்



இந்த உணவு முறை பின்பற்றுபவர்களுக்கு ஆர்த்தோரெக்ஸியா நெர்வோசா வரலாம்



மருத்துவரின் அறிவுரை பெற்ற பின்னரே இந்த உணவு முறை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்