டார்லிங் படம் மூலமாக அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி. மிருகம் படம் மூலமாக சினிமாத்துறைக்குள் வந்த நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக சுற்று சென்று வருகின்றனர். நிக்கி கல்ராணி சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நிக்கி கல்ராணியும், ஆதியும் முன்னதாக, மல்பு, யாகவராயினும் நா காக்க, மரகரத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது. சில வருடங்களுக்கு முன்பு எங்களை நாங்களே கண்டுபிடித்தோம்” என்று நிக்கி கல்ராணி கூறியிருந்தார். ஆதி, நாங்க ஒரு 6, 7 வருடங்கள் நண்பர்களாக இருந்தோம். அப்பத்தான் ஒருத்தர் ஒருத்தர நல்லா புரிஞ்சிக்கிட்டோம். அப்ப இரண்டு பேருக்குமே இவங்க நம்ம வாழ்கை துணையா வந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அப்படித்தான் எங்களோட காதல் மலர்ந்தது. என்கிறார் ஆதி