நாம் சமையலறையில் கவனக்குறைவு காரணமாக பாத்திரங்களை நாம் தீய விடுவதுண்டு சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்களைக் கொண்டே இதனை பளபளப்பாக மாற்ற முடியும் கோலா, பெப்சி போன்ற பானங்கள் தீய்ந்த பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும் நன்றாக கொதித்தவுடன் பிளாஸ்டிக் பிரஷ் அல்லது டிஷ் சோப்பு வைத்து நன்றாக தேய்க்கவும் உப்பு, சமையல் சோடாவை நீங்கள் பயன்படுத்தும் டிஷ் சோப்பில் சேர்த்து வழக்கம்போல தேய்க்கலாம் பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து அதை பாத்திரத்தில் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவலாம் இரவு தீய்ந்த பாத்திரத்தில் தண்ணீருடன் ஒரு கப் வினிகரைச் சேர்த்து ஊறவைத்து காலையில் கழுவலாம் தீய்ந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வெங்காய தோல் சேர்த்து கொதிக்கவிட்டு டிஷ் வாஷ் சேர்த்து கழுவலாம் தீய்ந்த பாத்திரத்தில் தக்காளி சாஸ் ஒரு ஸ்பூன் போட்டு இரவில் ஊற வைத்து காலையில் டிஷ் வாஷ் சேர்த்து கழுவலாம் எலுமிச்சை சாற்றை தீய்ந்த பாத்திரங்களில் சிறிது நேரம் தடவி ஊற வைத்து கழுவவும்