மனைவி, மகள் என மகிழ்வான குடும்பத்தோடு வாழும் தனுஷ் திடீரென மகளின் தோற்றத்தில் மாற்றம்.. சோனு என்கிற ஆவி மகளுக்குள் புகுந்திருப்பதை கண்டுகொள்கிறார் தனுஷ் தனது அப்பா கதிரைக் கொன்றால்தான் உடலை விட்டு வெளியேறுவேன் என அடம் பிடிக்கிறது ஆவி தனுஷ், கதிரைக் கொன்றாரா? கதிருக்கும் ஹீரோவிற்கும் என்ன சம்பந்தம்? போன்றவற்றிற்கு பதிலைத் தருகிறது மீதி கதை படம் ஆரம்பிக்கும் போது இருந்த செல்வராகவன் டச், இடையிடையே காணாமல் போனது முதலில் பேய் கதை போல ஆரம்பித்த படம், பிறகு த்ரில்லராக மாறியது முதல் பாதி சூப்பர்..இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார் இரட்டை வேடங்களில் கலக்கியிருக்கிறார் தனுஷ் 2 மணி நேரத்தில் படத்தை முடித்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் செல்வராகவன் யுவனின் இசை எப்போதும் போல இதிலும் மாஸ்!