தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பாடலாசிரியராக இருந்தவர்.



கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் வாழ்பவர்,.



தங்கமீன்கள், சைவம் படத்திற்கு தேசிய விருது வாங்கினார் நா.முத்துக்குமார்.



வேடிக்கைப் பார்ப்பவன், அணில் ஆடும் முன்றில், குழந்தைகள் நிறைந்த வீடு உள்ளிட்ட பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.



நா.முத்துக்குமார், யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்தால் நிச்சயம் அந்த பாடல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும்.



ண்மூடித் திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல,, அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே..
குடையில்லா நேரம் பார்த்து கொட்டிப்போகும் மழையைப் போல..அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே..



இயக்குநர் பாலாவின் நந்தா படத்தில் யுவன் சங்கர் ராஜாவும் நா. முத்துக்குமாரும் முதன்முதலில் இணைந்தனர்.



சூர்யா நடித்த ஆதவன் படத்தில் தனது ஆயிரமாவது பாடலை எழுதினார்.



தரமணி ஆல்பத்தில்From the bottom of my heart என்று தனக்கும் நா. முத்துக்குமருக்கும் உள்ள உறவை பற்றி இயக்குனர் ராம் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவரும் பேசியிருப்பார்கள்.



இந்த வாழ்க்கையை நிம்மதியுடன் கடக்க உடன்நிற்கும் கவிஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. என்றும் எங்களுடன் இருப்பீங்க. நா.மு.